×

பெண்களை அவதூறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.30: ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமரை கண்டித்து திருச்சியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்ஒரு பகுதியாக திருச்சி மாநகர், மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அருணாச்சல மன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலை பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், மீனவர் அணி மாவட்ட தலைவர் வக்கீல் தனபால், மாவட்டச் செயலாளர் எழிலரசன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவி மாரிஸ்வரி, ஊடகப்பிரிவு செந்தில்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பெண்களை அவதூறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Congress ,Modi ,Trichy ,Women's ,Congress ,Rajasthan ,parliamentary election ,18th Lok ,Sabha ,Women ,
× RELATED மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்